டெல்டா பகுதியில் மலர்ந்தது முதல் டைடல் பூங்கா!...ரூ.61 கோடி மதிப்பில் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் டைடல் பூங்கா அமைக்கும் திட்டமானது 1990-ம் ஆண்டு IT துறை வளர்ச்சியின் போது தொடங்கப்பட்டது.

அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன.

இவை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாட்டிலுள்ள சிறு நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த மினி டைடல் பூங்காக்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேலும் இந்த டைடல் பூங்காக்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிரிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ரூ.4.66 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், ரூ.17.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள் என பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The first tidal park to blossom in the delta area the first to open at a cost of Rs 61 crores


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->