தி கேரளா ஸ்டோரி | ஆதாரம் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு - இஸ்லாமிய அமைப்பு அறைகூவல்! - Seithipunal
Seithipunal


தி கேரளா ஸ்டோரி தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், திரைப்படத்தில் முக்கிய காட்சி ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கேரளா மாநில இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த படம் இஸலாமியர்கள் மீது ஒரு பொய்யான கட்டமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. 

இதற்கிடையே, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்த திரைப்படம் தொடர்பாக கேரளா உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், "நாடு கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அவ்வாறு நிரூபிக்கும் நபருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்" என்று, கேரளாவை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

முன்னதாக கேரள நடிகர் ஷுக்கூர் "32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு 32 பெண்கள் நாடு கடத்தப்பட்டதை நிரூபித்தால் ரூ.11 லட்சம் பரிசாக வழங்குவேன்’’ என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the kerala story issue islam 02052023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->