தெலுங்கு தேசத்தை மீண்டும் உயிர்ப்பித்த "ஆந்திராவின் பப்பு" இவர் தான்..!! - Seithipunal
Seithipunal



தேர்தலில் நிற்காமலே, களத்தில் மக்களை சந்திக்காமலே மாநில அமைச்சராக ஆக்கப்பட்டார். என். டி. ஆர், சந்திரபாபு நாயுடு புண்ணியத்தால் அரசியலில் கால் பதித்தார் என்றும், "ஆந்திராவின் பப்பு" என்று எதிர்க் கட்சிகளாலும், சொந்த கட்சியினராலேயே கூட விமர்சிக்கப் பட்டவர் தான் "நர லோகேஷ்".

ஆனால் இப்போது அதே ஆந்திர மக்களும், ஊடகங்களும் இவரை ஆந்திரா மற்றும் தெலுங்கு தேசத்தின் எதிர்காலம் என்று கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் பாஜக மற்றும் ஜன சேனா கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அமோக வெற்றி பெற்று தனது தந்தை சந்திரபாபு நாயுடுவை மீண்டும் ஆந்திர முதல்வராக அரியணை ஏற்றியது தான்.

முன்னதாக 2023 ஜனவரியில்ஆந்திராவில் 4000 கி. மீ பாதயாத்திரை சென்றார் நர லோகேஷ். ஆந்திராவில் நர லோகேஷின் "யுவ காலம் பாத யாத்ரா" மக்களிடையே தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு இணைப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.


ஒரு அதிகாலை சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட போது, கட்சியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று, தந்தைக்காக நீதிமன்ற படிகளையும் ஏறி இறங்கினார். மேலும் தன் தந்தையின் கைதுக்கு நியாயத்தை மக்கள் மன்றத்தில் கோரினார். 

ஜெகனின் பழிவாங்கும் அரசியல், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதது, பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் என்று எல்லாவற்றையும் மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டினார். மேலும் தந்தையின் தயவில் அரசியலுக்கு வந்தவர் என்ற விமர்சனத்தை தூக்கியடிக்கும் விதமாக இந்த தேர்தலில் மங்களகிரி தொகுதியில் 91000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் நர லோகேஷ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Man Who Resurrect TDP in Andhra


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->