உதயசூரியன் நட்சத்திரங்களுக்கு அஞ்சியது கிடையாது - தமிழச்சி தங்கபாண்டியன்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என முதல் மாநாட்டிலேயே அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசிய அவர்,  மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், அவர்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயாச ஆட்சியா என்று கேள்வி எழுப்பிய அவர், பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துபவர்களும் தங்கள்  கொள்கை எதிரி தான் என்று பேசினார்.

இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், எத்தனை கட்சிகள் வந்தாலும் சரி அதுகுறித்து கவலையில்லை என்றும்,  உதயசூரியன் என்றுமே நட்சத்திரங்களைப் பார்த்து அஞ்சியது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The rising sun never feared the stars tamilachi thangapandian


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->