செல்பி பாயிண்ட்-ஆக மாறிய த.வெ.க மாநாட்டு திடல்!...பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


தவெக மாநாட்டில் சுமார் 8 லட்சம் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நேற்று மாநாட்டில் பங்கேற்க முடியாதவர்கள் அவ்வழியாக செல்லும் போது செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை புரிந்தனர். மேலும், மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா  மாநிலங்களில் இருந்தும் பொது  மக்கள் படையெடுத்து வந்தனர்.

பல்வேறு நாட்டுப்புற நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த மாநாடு, சுமார் 3 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்றினார். மேலும் இந்த மாநாட்டில் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் 8 லட்சம் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இந்த மாநாட்டில் நேற்று பங்கேற்ற முடியாத பொதுமக்கள் சிலர் வி.சாலை வழியாக செல்லும் போது, மாநாட்டு திடலின் முகப்பு வாயில் மற்றும் மேடை முன்பும் செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The tvk conference has become a selfie point people are happy to take selfies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->