பாரிசில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாடு - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.!
Thirukkural Conference at the UNESCO in Paris
தமிழக சட்டமன்ற பேரவையில் மானிய கோரிக்கைகள் மீது துறை ரீதியாக விவாதம் நடைபெற்று வருகின்றன. மேற்கொண்டு, கேள்வி நேரத்திற்கு பின்னர் தொழில்துறை, தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை போன்றவையும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது.
இதில், தமிழ் பண்பாடு துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதில்,
ஐக்கிய நாட்டு கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் மூலம் திருக்குறளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், பாரிசில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாடு நடத்துவதற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
தமிழகம் முழுவதுமுள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஓராண்டிற்கு மூன்று முறை தமிழ் கூடல் நிகழ்வுகளை நடத்தி தமிழ் மன்றங்களை மேம்படுத்துவதற்கு 5.60 கோடி ரூபாய் வழங்கப்படும்.
அனைத்து ஊடகங்களிலும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள். இதில் சிறப்பு பெறும் ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளா முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :
1. தொழில் துறையின் பெயர் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை என மாற்றம் செய்யப்படும்.
2. மாநில அளவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்க ஆணையரகம் உருவாக்கப்படும்.
3. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,800 கோடி மதிப்பில், 3,000 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
4. சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்துவதற்கு எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும்.
5. தஞ்சாவூர் மாவட்டம், உதகையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.
மேற்கண்டுள்ள, புதிய அறிவிப்புகளை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
English Summary
Thirukkural Conference at the UNESCO in Paris