ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து நீக்கமா? திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
Thirumavalavan Aadavarjuna VCK
சென்னையில் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது; பிறப்பின் அடிப்படையில் ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படக் கூடாது. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்த கருத்து, திமுக-விசிக கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் செயல் என்று, திமுகவில் பலரும் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக குரல் எழுப்பி, அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த திருமாவளவன், "ஆதவ் அர்ஜுனா பேசியது தவறானது. தமிழகத்தில் மக்களாட்சியே நடக்கிறது. அவரிடம் விளக்கம் கேட்கிறோம். நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்கக் கூடும் என்று தகவல் வெளியாக, "நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை" திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியில் உள்ள ஆதரவாளர்கள் காரணமாக அவரை நீக்கும் அளவுக்கு திருமாவளவன் முடிவு எடுக்க மாட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Thirumavalavan Aadavarjuna VCK