இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு திருமாவளவன் அட்வைஸ்! - Seithipunal
Seithipunal


பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் பொருளாதாரத்தை பின் தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியதை அடுத்து பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன் "பொருளாதாரத்தின் நலிவடைந்த உயர் சாதி பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது" என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை ஒரே கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த தீர்ப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன் "பொருளாதாரத்தில் நடுவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்த போதும் ஆதரித்தோம். இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்தக் கூடாது" என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மாநகர ஜெயராம் ரமேஷ் "பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கு அடித்தளமிட்டது காங்கிரஸ்தான். கடந்த 2005-2006ம் ஆண்டு காலகட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சின்கோ ஆணையம் அமைக்கப்பட்டதன் பலனாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த ஆணயத்தின் அறிக்கையின் படி கடந்த 2014ம் ஆண்டு 103வது அரசியல் சாசன திருத்த சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. எனவே இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி" என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் "சமூக நீதிக்கு எதிராக அமல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் நிலையை காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இது போன்ற சட்ட திருத்தங்கள் சமூக நீதிக்கு எதிராக அமைந்து விடும்" என கருத்து தெரிவித்துள்ளார். இதே போன்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக இருந்து எதிர்த்துள்ளது. ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் மாறுபட்ட கருத்தால் மக்கள் குழம்பி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan advises Congress and Marxist pary


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->