"ஈழத் தமிழர்களை ஆயுதக் குழுக்களாக" மாற்றியதே காங்கிரஸ்தான்.!! திருமாவளவன் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை அதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஈழத் தமிழர்களை ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ் தான் என குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தலில் ஒரே கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட திட்டமிட்டுள்ள காங்கிரஸ் மீது விசிக தலைவர் சுமத்தி இருக்கும் இந்த குற்றச்சாட்டு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் திமுக தான் என கூறினால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பயன் தரலாம். ஆனால் ஈழ த் தமிழர் தமிழர்களுக்கு எப்போதும் பயன் தராது. ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திமுகவையும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மட்டுமே குறை கூறினார்கள். ஆனால் உலக அளவில் ஈழத்தை அடிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தியாவில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடைபெறவில்லை. உலக நாடுகள் ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என திரும்பத் திரும்ப குறை கூறினர். ஈழத் தமிழர்களை மிகப் பெரிய ஆயுத குழுக்களாக மாற்றியது காங்கிரஸ்தான் என திருமாவளவன் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirumavalavan alleged Congress turned Eelam Tamils ​​into armed groups


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->