பாஜக ஆட்சியில்.. "அரசியலமைப்பு" சட்டத்திற்கு ஆபத்து.. டெல்லியில் முழங்கிய திருமாவளவன்..!!
Thirumavalavan said Constitution threatened by BJP
எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுமான கூட்டணியை அமைக்கும் வகையில் அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்ற முழக்கம் வலுப்பெற்றுள்ளது. தற்பொழுது இந்தியாவில் தேசிய கட்சிகளை காட்டிலும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சமூக நிதிக்கான அகில இந்திய கூட்டமைப்பில் ஒன்றிணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கிய இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதே போன்று தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன. குறிப்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது "சமூக நீதிக்கான கொள்கை சனாதான தர்மத்திற்கு எதிரானது. ஜனநாயகத்தை பாதுகாக்க சனாதனத்துடன் போராட வேண்டி உள்ளது. பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன சமூகத்திற்கான இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.
பாஜக ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மையமாகியுள்ளது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைந்து நடத்துமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். பாஜக ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மையமாகியுள்ளதால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Thirumavalavan said Constitution threatened by BJP