அன்று அட்டைப்பெட்டி... இன்று கட்டப்பை! கையாலாகாத திமுக - கொந்தளிக்கும் அதிமுக! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து கட்டை பையில் எடுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மூளை தொடர்பான பிரச்சினைக்கு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை, சுமார் ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தது. குழந்தையின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து கட்டை பையில் பாட்டியும், தாத்தாவும் கணீர் மாலா எடுத்து செல்லும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த கோவை சத்யன் மற்றும் ராஜ் சத்யன் இதற்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அவர்களின் செய்தி குறிப்பில், "அன்று அட்டைப்பெட்டி... இன்று கட்டப்பை!

மரணித்த குழந்தையை குறைந்தபட்ச மரியாதையுடன் பெற்றோரிடம் ஒப்படைக்க கூட இந்த #விடியா_திமுகமாடல் அரசால் முடியாதா?

இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படாமல் தடுத்திருக்க வேண்டும். அல்லது, குறைந்தபட்சம் ஏற்கனவே இதுபோன்று நடந்தபோதாவது விழிப்படைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்த விடியா திமுக அரசுக்கு சுயபுத்தியும் இல்லை- சொல்புத்தியும் இல்லை.

உங்களுக்கு நீங்களே புகழாரம் சூட்டிக்கொண்டு வலம் வருவதை விடுத்து, உண்மை நிலையை என்றைக்காவது பார்க்கும் எண்ணம் இருக்கிறதா முக ஸ்டாலின்? என்று ராஜ் சத்யன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை சத்யன் செய்திக்குறிப்பில், 
இன்று - கட்டை பையில் இறந்த குழந்தையின் உடல். 
போன வருடம் அட்டை பெட்டியில். 
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் சுகாதாரத்துறையின் லட்சணம். 
வெட்கமாய் இல்லையா அமைச்சர் மா.சுப்ரபாமணியன் அவர்களே? 
#கையாலாகாத_திமுக" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirupathur Child death case ADMK Condemn to DMK govt mkstalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->