தி.மலை., அக்னிகலசம் : பின்னணியில் திமுக அமைச்சர்? 1 லட்சம் அக்னி கலசம் நிறுவினால் என்ன செய்வீர்கள்? இயக்குனர் கவுதமன் ஆவேசம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 1989ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில், வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் நிறுவப்பட்டது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறந்து வைத்துள்ளார்.

இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கான பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம், பின்னர் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே மீண்டும் நிறுவப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இடம் புகார் அளித்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரும் என்று கருதி, வன்னியர் சங்க அக்னி கலசத்தை அகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, காவல்துறை பாதுகாப்புடன் அக்னி கலசத்தை அகற்றினர்.

இதற்க்கு கண்டனம் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நாயுடு மங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கவுதமன் தெரிவிக்கையில், "ஒரு தமிழ் சமூகத்தின் பெரும் குடியாக இருக்கக்கூடிய அடையாளத்தை இரவோடு இரவாக நீங்கள் எடுத்துச் சென்றீர்கள் என்றால் என்ன அர்த்தம்? 

இது அடுத்த கட்டத்திற்கு செல்வதற்குள், இந்த இடத்தில் மீண்டும் அக்கினி கலசம் நிறுவப்பட வேண்டும். 

நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்., இந்த பகுதியிலிருந்து சென்ற அமைச்சர் ஏவா வேலு இதற்குப் பின்புலமாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. உண்டா இல்லையா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்ல இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் என் கையில் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். ஒரு மாவட்ட ஆட்சியர் சொல்கின்ற வார்த்தையா இது?

நெடுஞ்சாலைக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இருக்காதா? இந்த நெடுஞ்சாலையில் எத்தனை சிலைகள் இருக்கின்றன., அதை ஏன் இன்னும் எடுக்கவில்லை. தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன. 

நான் எல்லா தலைவர்களும் மதிக்கிறேன். சிலைகள் அனைத்து சிலைகளும் மதிக்கப்பட வேண்டியது. நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சிலைகளையும் நீங்கள் எடுத்து விடுவீர்களா? இதில் மாவட்ட ஆட்சியரின் நிலை என்ன? 

வெற்றிவேல், நடேசன் நீங்கள் அனைவரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல., நீங்கள் எங்களுடைய சக குடிகள். எங்களுடைய சகோதரர்கள். ஆனால் உங்களுடைய வன்மத்தை நீங்கள் இதில் தான் காட்டுவீர்களா?

வெற்றிவேல், நடேசன் அவர்களும் ஆட்சியர் முருகேஷ் அவர்களும் சேர்ந்து இந்த பகுதியில் ஒரு சாதி கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறீர்கள்.

உங்களைப்போல நான் சாதி கலவரத்தை உருவாக்க நினைக்கவில்லை. அதனை சரி செய்யவே நினைக்கிறேன்.

இந்த ஒரு சிலையை எடுத்தால்., ஒரு லட்சம் அக்னிகுண்டம் சிலைகள்., அனைத்து நெடுஞ்சாலைகளிலும், வட மாவட்டம் முழுக்க வைத்தால் என்ன செய்வீர்கள்? 

எனவே, வன்மத்தை உருவாக்க வேண்டாம். அமைதியை ஏற்படுத்துங்கள். எங்களுடைய தமிழர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குங்கள் இதான் நான் கேட்டுக்கொள்வது" என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai vanniyar akni kalasam issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->