இந்த நோயா!..அமைச்சர் நமச்சிவாயத்திற்கு தீவிர சிகிக்சை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியியில் டெங்கு, சிக்குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அமைச்சர் நமச்சிவாயம்  மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சளி, காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

பின்னர் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதை  அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று  ஆலோசனை தெரிவித்தனர்.

இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும்  ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This disease minister namachiwayam serious treatment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->