இப்போது இது தேவையில்லை - விஜய்க்கு பாடம் எடுத்த திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தவெக மாநாட்டில் கூட்டணி, அதிகாரத்திலும் பங்கு என்பது குறித்து விஜய் இப்போது பேசியிருக்கக்கூடாது என்றும், இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சி  உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இது போன்று கூட்டணி குறித்து வெளிப்படையாக அவர் பேசக்கூடாது என்றும், மறைமுகமாக ஒவ்வொரு கட்சியையும் அழைத்து, ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும், யார் வேட்பாளர் என்பதெல்லாம் வெளிப்படையாக பேசக்கூடாது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் இந்த நிலைப்பாடு, தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் என்றும்,  இது, சரியான நேரத்தில் கையாளப்படவில்லை என்று விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் எந்த கட்சியும் தங்களை பலவீனப்படுத்திக் கொள்ள விரும்பாது என்று கூறிய அவர், விஜய்யின் ஒட்டுமொத்த பேச்சும் தி.மு.க மீதான எதிர்ப்பாகவே உள்ளது என்றும், பாஜக எதிர்ப்பில் த.வெ.க. தலைவர் விஜய் உறுதியாக இல்லை என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This is not needed now thirumavalavan took lessons from vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->