நடிகர் ரஜினிகாந்தை கொலை வழக்கில் கைது செய்யவேண்டும்! வெளியான ஆணையத்தின் அறிக்கை - பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, கலவரம் வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பெரு சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்துவந்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம், அதன் அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்குரைஞர் ரஜினி ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, உயிரிழந்த மாணவி சுஸ்னோலின் தாயார் வனிதா தெரிவிக்கையில், "போராடியவர்களை குருவி சுடுவது போல சுட்டுக்கொன்றனர், ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 16 பேர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைவர் வழக்குரைஞர் ரஜினி பேசுகையில், "தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படப்போகும் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்

போராட்டத்தில் பயங்கரவாத ஊடுருவல் எதுவும் இல்லை என நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi issue against actor rajinikant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->