திருமாவளவனுக்கு நேரம் சரியில்லை?...அமைச்சரவையில் பங்கு குறித்து வன்னியரசு விளக்கம்! - Seithipunal
Seithipunal


அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் இன்று பகிர்ந்த நிலையில், தொடர்ந்து ஒரு சில நிமிடங்களிலேயே அந்த வீடியோவை நீக்கியுள்ளார். 

முன்னதாக அவர் வெளியிட்ட அந்த வீடியோ பதிவில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி இருந்தார். இந்நிலையில் திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்ததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம்  தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, விசிக தலைவர் திருமாவளவனின் வீடியோ பகிரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், திருமாவளவனின் பேச்சு அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று தெரிவித்தார்.

நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன்  கூட்டணி வைத்து வெற்றி பெற்ற திருமாவளவன், எதிர்க்கட்சியான அதிமுகவை மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளதும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று தற்போது வீடியோ வெளியிட்டு நீக்கி இருப்பதும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசிக தலைவருக்கு நேரம் சரியில்லை என்றும், அவர் கூட்டணி நிலைப்பாட்டில் மாறலாம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Time is not right for Thirumavalavan Vanniarasu explained about the role in the cabinet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->