அவ்வளவு பயமா முதல்வர் ஸ்டாலின்? தோழர் சொன்னது உண்மைதான் போல... அதிமுக போட்ட டிவிட்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையின் இவ்வாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் தொடக்கத்திற்காக சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை அ.தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் சூழ்ந்துகொண்டு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து முடிவடைந்தவுடன், அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் கோஷமிட, ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையை விட்டு வெளியேறினார். 

இதையடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பதாகைகளை ஏந்தியபடி, அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையை விட்டு வெளியேறினர். 

இதுவரை இல்லாத நிகழ்வாக, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் நிகழ்வுகளுக்கான நேரலை இணைப்பை ஊடகங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க. ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கான காட்சி இணைப்பு ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டது ஏன்? பேரவை நிகழ்வுகள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று மொத்தமாக துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு!

"யார் அந்த SIR என்ற கேள்வியை எதிர்கொள்ள அவ்வளவு பயமா முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடப்பது "அவசர நிலை" ஆட்சி என்று தோழர் சொன்னது_உண்மைதான்!," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly MK Stalin DMK AIADMK EPS  


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->