CBI விசாரணை! பகல் கனவு பலிக்காது என்ற பதற்றமா? திமுகவுக்கு பாஜக சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


கள்ளச்சாராய வழக்கில் CBI விசாரணையைக் கண்டு திமுக அரசு அஞ்சுவது ஏன்? மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம் வேண்டும்? என்று, தமிழநாடு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்த அதன் அறிக்கையில், "கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கை CBI-க்கு மாற்றுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 

அதிலும் குறிப்பாக கள்ளச்சாராயம் விற்றவர்களில் சிலர் திமுக-வைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் CBI விசாரணையை நடத்த விடாமல் முட்டுக் கட்டை இட்டு, எப்படியாவது குற்றவாளிகளைக் காப்பாற்றி விட வேண்டும் என்று திமுக துடிப்பது போலத் தான் தெரிகிறது

காரணம், இந்த திராவிட மாடல் அரசு CBI விசாரணையைக் கண்டு நடுங்குவது இது ஒன்றும் முதன்முறையல்ல. 

தங்கள் மீது தவறில்லை என்றால், ஒரு வழக்கின் உண்மைத் தன்மையை வெளிக்கொணரும் CBI விசாரணையை திமுக அரசு தொடர்ந்து எதிர்ப்பது ஏன்? 

ஒருவேளை அக்குற்றங்களில் எல்லாம் திமுக-விற்கும் தொடர்பு இருக்குமோ? 

அல்லது தங்களின் நிர்வாகக் குளறுபடிகளைக் கண்டு பிடித்துவிடுவார்கள் என்ற பயமா? 

அல்லது அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்கி வழக்கை மூடிவிடலாம் என்ற அவர்களின் பகல் கனவு பலிக்காது என்ற பதற்றமா?" என்று தமிழ்நாடு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP condemn to DMK Govt Kallasarayam CBI Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->