அமைச்சர்கள் எதற்கு? கோபாலபுர குடும்பத்திற்கு சேவகம் செய்வதற்கா? - எச்சரிக்கும் பாஜக! - Seithipunal
Seithipunal


ஆணவத்தின் எல்லை பேரழிவு என்பதை திமுக தலைவர்கள் உணர வேண்டும் என்று, தமிழ்நாடு பாஜக எச்சரித்துள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "சென்னை பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 உயிர்கள் பலியானதோடு கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், “இவ்ளோ மழை பெய்யுறப்போ குடிநீரில் ஒரு இடத்தில் கூட கழிவுநீர் கலக்காதா?” என்று கேட்கும் திமுக அமைச்சர் மோ. அன்பரசு அவர்களின் திமிர் பேச்சு மிகவும் கண்டனத்திற்குறியது.

திமுக-வின் மெத்தனத்தால் அநியாயமாக மூன்று உயிர்கள் பறிபோயுள்ள வருத்தம் சிறிதுமின்றி, “ஆமாம் அப்படித்தான் நடக்கும்” என்ற தொனியில் பேசுவதற்கு எத்தனை நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும்? 

அரசு வழங்கும் குடிநீரை நம்பிக் குடித்ததைத் தவிர அம்மக்கள் என்ன பாவம் செய்தனர்?  

வெள்ளம் வந்தால் குடிநீர் மாசுபடத்தான் செய்யும் என்று கூறுவதற்கு அரசாங்கம் எதற்கு? அரசு அமைச்சர்கள் எதற்கு? கோபாலபுர குடும்பத்திற்கு சேவகம் செய்வதற்கா? அல்லது உதயநிதியின் மனதில் இடம் பிடிப்பது யார் என்று பந்தயம் போடுவதற்கா?

அதுசரி பேரிடர் காலங்களில் மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதைக் உறுதிசெய்ய வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உதயநிதியின் உதயநாள் விழாவைக் கண்ணும் கருத்துமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தால், எப்படி விளங்கும்?
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP condemn to DMK MInisters


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->