யாருக்கு என்ன பொறுப்பு? தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!
TN Cabinet Change full detail
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பொறுப்பு, தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதித் துறையை மேற்கொண்டு வந்த அமைச்சர் எஸ். முத்துசாமிக்கு, இப்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ மனோ தங்கராஜ், மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு புதிய பொறுப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ஆர்.எஸ். ராஜா கண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்காக, நாளை மாலை 6 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
English Summary
TN Cabinet Change full detail