செந்தில்பாலாஜி, பொன்முடி நீக்கம்! தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம்!
TN Cabinet MK Stalin Senthilbalaji ponmudi
திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படும் நிலையில், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
மேலும், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவந்த அமைச்சர் பொன்முடியையும் அமைச்சரவையிலிருந்து நீக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
செந்தில்பாலாஜி நீக்கம் ஏன்?
போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக மோசடி வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
பின்னர் அடுத்த இரு நாளில் செந்தில்பாலாஜியை தியாகி என்று போற்றிய முதல்வர் ஸ்டாலின், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கினார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று இரண்டில் ஒன்றை தேர்வு செய்து 28 ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
எனவே, செந்தில்பாலாஜி அமைச்சரவையிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
English Summary
TN Cabinet MK Stalin Senthilbalaji ponmudi