தமிழகத்தில் நகராட்சி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி வருகின்ற 17 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ளது.

மேலும் இந்தத் தேர்தலுக்கான பணிகளை தற்போதே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டனர். இதேபோல் தேர்தல் ஆணையமும் இந்த நகராட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச்சாவடி மையங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்துவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஆலோசனை நடத்தியும் உள்ளது.

மேலும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வார்டுகளை பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

முக்கியமாக ஆண் வேட்பாளர்கள், பெண் வேட்பாளர்கள் போட்டியிட இட ஒதுக்கீடு செய்வது குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி, இன்னும் இரண்டு நாட்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தலுக்கான 'தேர்தல் தேதி' வருகின்ற 17ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது உறுதியான தகவலோ, அதிகாரப்பூர்வமான செய்தியோ இல்லை... வெளியான தகவலின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Cooptation Election Date Announce Date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->