#BREAKING || நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு வழக்கு: எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவிக்கையில்,

'ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் இந்த உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில் நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? ஏற்கனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்து உள்ளது. அந்த விசாரணையின் போது நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க எங்களால் முடியாது. வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடருங்கள். 

இந்த வழக்கைப் பொறுத்தவரை எங்களுடைய கைகள் கட்டப்பட்டு உள்ளது. ஏனென்றால் உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வழக்கு சம்பந்தமாக நாங்கள் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது" என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN ELECTION 2022 CHENNAI HC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->