அரசுத் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு குறைந்து வருகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!
TN Minister Thangam Thennarasu Speaks About Central Govt
சட்டமன்றத்தில் இன்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசின் மீது குற்றம் சாட்டி உள்ளார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது, "மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பிட்டு சொல்வதானால் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு வெறும் ரூ. 1.50 லட்சம் தான்.
ஆனால் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 12 முதல் ரூ. 14 லட்சமாக உள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறை போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களிலும் மத்திய அரசின் போக்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய அனைத்து திட்டங்களும் வேறு மாநிலத்திற்கு செல்கிறது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகளின் அடிப்படையில் தான் மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் சென்னையில் நடைபெறும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை.
இதனால் தமிழக அரசுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி அளவில் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதே மத்திய அரசு தான் நாக்பூர், கொச்சி, புனே உள்ளிட்ட நகரங்களில் 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு அனுமதியோடு, நிதியையைம் சேர்த்து வழங்கி உள்ளது.
மத்திய அரசு தமிழக மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கி இருந்தால் நாம் இதற்கு செலவிட்ட ரூ. 12 ஆயிரம் கோடியை வேறு பல திட்டங்களுக்கு செலவிட்டு இருப்போம். பேரிடர் நிவாரண நிதியும் நாம் கேட்டபடி ஒதுக்கவில்லை" என்று பேசியுள்ளார்.
English Summary
TN Minister Thangam Thennarasu Speaks About Central Govt