தமிழக கோவில்களில் இவர்களுக்கு திருமணம் நடந்தால், மணமக்களுக்கு புத்தாடைகள் இலவசம் - தமிழக அரசு உத்தரவு,! - Seithipunal
Seithipunal


தமிழக கோவில்களில் மாற்றுத்திறனாளி திருமணம் நடந்தால் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது தமிழக கோவில் மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளி மணமக்களின் திருமணங்களுக்கு, வாடகை வாங்காமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களில், இனி மணமக்களுக்கு புத்தாடைகள் கோவில் சார்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கோவில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையும் வாங்காமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் திருமணங்களில், இனி கோவில் சார்பாக மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை கோவில் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகளை தனிக் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn temple marriage some offer to govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->