எலும்பு துண்டு கிடைக்குமா என மு.க ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்..!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம்..!!
TNBJP Annamalai severely criticized to CM Stalin
துணைப் பிரதமர் பதவிக்காக பினராய் விஜயனை தாஜா செய்கிறார்..!!
கோவை மாவட்டம் அன்னனூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் 3500 ஏக்க நிலத்தை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைக்க கடந்த அக்டோபர் 11ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கோவை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நேற்று அன்னூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் "விவசாய வளம் நிறைந்த அன்னூர் சிப்காட் தொழிற்சாலைகளை தூங்குவதை விட தூத்துக்குடி, திருநெல்வேலி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் துவங்கலாம். அந்தப் பகுதியில் இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இங்கே கையகப்படுத்தும் நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்கள்.
தமிழக எல்லையான தேனி மாவட்டத்தில் கேரள அரசு ஒரு சர்வே எடுத்து வருகிறது. அதன் வாயிலாக 80 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் இதனைப் பற்றி எல்லாம் முதல்வர் ஸ்டாலின் கவலைப்படாமல் பினராய் விஜயனுடன் பேசிவிட்டு 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஏதாவது எலும்பு துண்டு கிடைக்குமா என எதிர்பார்க்கிறார். துணை பிரதமர் ஆவதற்கு ஸ்டாலின் அவரை தாஜா செய்கிறார்" என முதல்வர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
TNBJP Annamalai severely criticized to CM Stalin