இந்தியா மதவாத நாடாகத் தொடங்கியிருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது - தமிழக பாஜக துணைத்தலைவர் அச்சம்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இஸ்ரேலியருக்கு இஸ்லாமியர் பொருள் தர மறுத்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்தியா மதவாத நாடாகத் தொடங்கியிருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், கேரளாவில் உள்ள ஒரு இஸ்லாமியர் தன் கடைக்கு வந்த இஸ்ரேலிய தம்பதிகளை வெளியே போக சொல்லியும் அவர்களுக்கு பொருள்கள் எதுவும் விற்கமுடியாது எனவும் தகராறு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

மத சார்பற்ற இந்தியா என மாரத்தட்டி கொள்பவர்கள் இந்த விவகாரம் குறித்து அமைதி காப்பது ஏனோ? 

மத அடிப்படைவாதத்தை அடிப்படையாக கொண்ட இந்த விவகாரம் இந்தியா மதவாத நாடாகத் தொடங்கியிருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

இதே போல் ஒவ்வொரு ஹிந்துவும் பாலஸ்தீனயர்களுக்கு, பாகிஸ்தானியர்களுக்கு பொருள் விற்க மாட்டோம் என்று கிளம்பினால் முறையாக இருக்குமா? அது தவறல்லவா? என்று, நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNBJP condemn to Kerala incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->