திமுக கூட்டணி வேட்பாளரை வீழ்த்தி வெற்றிபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.! வென்றான் விவசாயி - உற்சாகத்தில் தம்பிகள்.!
TNElection2022 Result ntk kumari
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், மற்றும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,
நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சி 1வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மைதிலி செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், மதுரை, அலங்காநல்லூர் பேரூராட்சி முதல் வார்டில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் காங்கிரஸ், திமுக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
குளச்சல் தொகுதி கப்பியறை பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி நாம் தமிழர் வேட்பாளர் சோபா ஆன்சி வெற்றி பெற்றுள்ளார்.
English Summary
TNElection2022 Result ntk kumari