எனக்கும் மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க.. நானும் கேள்வி கேட்க வேண்டிய கடமை இருக்கு.. சட்டசபையில் நடந்த ருசிகர சம்பவம்..!
Todays Interesting Incident in TN Assembly
இன்று தமிழக சட்டசபையில் ஒரு சுவாரசியமான விவாதம் அரங்கேறியுள்ளது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் கோஷம் எழுப்பிய அதிமுக வினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப் பட்டனர். இதையடுத்து இனி அவை நிகழ்வுகளில் பங்கேற்க போவதில்லை என்று கூறி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது வெளியேற்றிய அதிமுக எம்எல்ஏ க்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதையடுத்து சபாநாயகர் அனுமதி அளித்தும் அதிமுகவினர் உள்ளே வராமல் புறக்கணித்து விட்டனர்.
இதையடுத்து தொடர்ந்த கேள்வி நேரத்தில் தான் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. சபாநாயகர் அப்பாவு முதலமைச்சரிடம் உங்கள் தொகுதித் திட்டத்தின் மூலம் திசையன்விளை தொகுதியில் மாஜிஸ்திரேட் கோர்ட் அமைக்கப்படும் என்று கூறி அதற்கான அரசாணையும் வெளியிடப் பட்டது. அந்த திட்டம் எப்போது நிறைவேற்றப் படும் " என்று கேள்வி கேட்டார்.
இதையடுத்து அவை முன்னவரான அமைச்சர் துரை முருகன் கேள்வி நேரத்தில் சபாநாயகர் ஒருவர் கேள்வி கேட்பதை நான் இப்போது தான் பார்க்கிறேன் என்று கிண்டலாக கூறினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "எனக்கும் மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நான் கேள்வி கேட்க வேண்டிய கடமை உள்ளது" என்று கூறினார்.
English Summary
Todays Interesting Incident in TN Assembly