குடிபோதையில் ரகளை! தள்ளிவிட்ட இளைஞர் மீது கொலை வழக்கு!
Kovai drunk man death case Crime
கோவை ரயில் நிலையம் அருகே குடிபோதையில் ரகளை செய்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி சாலையில், 30 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையில் டீக்கடைக்கு வெளியே பிரச்னை செய்துள்ளார்.
அப்போது, அந்த டீக்கடையில் பணிபுரிந்த அன்வர் உசேன் (வயது 22) என்பவர் குடிபோதையில் இருந்தவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் சண்டையாக மாறியதைத் தொடர்ந்து, அன்வர் குடிபோதையில் இருந்தவரை கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் தலையில் காயமடைந்து பலியானார்.
இதுதொடர்பாக புளியங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சமயந்தி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதன் அடிப்படையில், காவல்துறையினர் அன்வரை கைது செய்துள்ளனர்.
English Summary
Kovai drunk man death case Crime