'கள்' பருகுவது மக்களின் உரிமை - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி  இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, " இங்கு யாருக்கும் முதலில் கள் பற்றிய புரிதலே இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளுக் கடைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

முதலில் கள் என்பது போதைப் பொருள் இல்லை. அது ஒரு உணவுப் பொருள் தான். பிறகு எதற்கு அரசிடம் கள்ளுக்கடை திறக்க அனுமதி கேட்க வேண்டும்? கள் இறக்குவது மற்றும் பருகுவது இரண்டுமே மக்களுடைய உரிமை. இந்த உரிமையை மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. 

நமது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் எல்லாம் கள்ளை உணவுப் பொருளாக பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் கடந்த 34 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வந்த பிறகே குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அரசே டாஸ்மாக் கடைகள் மூலம் தரமற்ற சரக்குகளை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. 

தற்போதைய கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின்னர் பலரும் கள்ளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் வகையில் இழப்பீடு வழங்கி வருகிறது. முதலில் தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்குவதாக இந்த நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Toddy Drinking is Peoples Right Says TN Kal Iyakkam Co Ordinator Nallasami


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->