விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு முக்கிய அழைப்பு விடுத்த செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.!
Tomorrow Vijay makkal iyyakkm district secretary meeting
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கனிசமான இடங்களில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் ஒரு சில இடங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கே கடும் போட்டி கொடுத்தனர்.
நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே அவரது புகைப்படத்தையும், கட்சியின் கொடியை மட்டுமே பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள முன்னாள் எம்எ.ல்.ஏ புஸ்ஸி ஆனந்த் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாரிசு திரைப்படம் மற்றும் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், விஜய்யும் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tomorrow Vijay makkal iyyakkm district secretary meeting