சில்லறை கட்சிகளுக்கு பதிலளிக்க முடியாது... பாஜகவை விமர்சித்த அமைச்சர்.!
TRB Raja criticizes BJP
பா.ஜ.க போன்ற சில்லறை காட்சிகளுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, கோவையில் தி.மு.க உதயசூரியன் மகத்தான வெற்றி பெறும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள் .
அ.தி.மு.க போன்ற பிரதான கட்சிகளின் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்வேன். பா.ஜ.க போன்ற சிலரை கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாது.
களத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவை வீழ்த்துவதற்காக வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க போன்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் கவன சிதறல் ஏற்படும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.