டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்! - Seithipunal
Seithipunal


தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த இரு ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பங்கேற்றனர். 

டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதே சமயத்தில், தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டு உள்ளார். மேலும், தற்போது இருக்கும் 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டு, புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி இன்று பிற்பகல் வெளியாகும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRB Raja Minister post 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->