"பாரத்" என பெயர் மாறும் இந்தியா? சட்டத்தில் இருக்கே! திமுக எம்.பி டி.ஆர் பாலு சப்போர்ட்? - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் "இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 1வது பிரிவில் இடம் பெற்றுள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றம் மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே அசாம் மாநில முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் ஷர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் "பாரத குடியரசு நமது நாகரிக அமுத காலத்தை நோக்கி தைரியமாக முன்னேறி வருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

இந்த நிலையில் டெல்லியில் திமுக நாடாளுமன்ற மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற திட்டமிட்டு இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது.

"இந்தியா" என்ற பெயரை உச்சரிக்க பாஜக பயப்படுகிறது. "பாரத்" என சொல்வதால் பாஜக வெற்றி பெற முடியாது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது எனக்கு தெரியவில்லை" என செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார். திமுக எம்.பி டி.ஆர் பாலுவின் இந்த பதிலானது பாரத் என இந்தியாவின் பெயரை மாற்றுவது அரசியலமைப்பு சட்டத்தின் படி சரி என்ற பொருள் படும்படியே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRBalu said the word Bharat is in Indian Constitution


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->