"விரைவில் திருச்சியில் விஜய் மாநாடு." ரசிகர் மன்ற Ex.நிர்வாகிகளின் அலப்பறை போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் மாநாடு திருச்சியில் நடந்த இருப்பதாக, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு உருவாகியுள்ளது.

கோலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். கடந்த சில வருடங்களாகவே இவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் தனது ரசிகர் மன்றத்தின் சார்பாக அவர் நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசியல் ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளவற்றை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

நடிகர் விஜய்க்கு வரும் ஜூன் 22ஆம் தேதி பிறந்தநாள் வருகின்றது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியின் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.அந்த விளம்பரத்தில், "திருச்சி என்றாலே விருப்பம் தான். தமிழ்நாடு காத்திருக்கிறது. விரைவில் மாநாடு. வா தலைவா வா."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விளம்பர போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விளம்பரங்களை செய்தவர்கள் ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Vijay manadu Poster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->