என்னது? தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க டி.டி.வி தினகரன்,ஓ.பி.எஸ்க்கு அனுமதி அளிக்கவில்லையா?
TTV and OPS not grant permission to meet Prime Minister Modi when he comes Tamil Nadu
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு அங்கிருந்து இன்று புறப்பட்டு தமிழ்நாடு வரவிருக்கிறார்.

இங்கு தமிழ்நாட்டில் பிரதமர் மோடி, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து, ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இதில் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 40 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரிய நிலையில், அனுமதி அளிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார்.
அதுமட்டுமல்லாமல்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரதரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
TTV and OPS not grant permission to meet Prime Minister Modi when he comes Tamil Nadu