"இல்லத்தரசிகளை ஏமாற்றியதா திமுக அரசு?" - 2023 பட்ஜெட் குறித்து டிடிவி ஆத்திரம்.! - Seithipunal
Seithipunal


இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் 2023 க்கான அறிவிப்பில் தகுதியின் அடிப்படையில் தான் குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவி தொகையான 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அறிவிப்பு குறித்து பேசியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியின் போது, "இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மாதா மாதம் வழங்கப்படும் என்று திமுக அரசு உறுதி அளித்தது ஏன்? என்பது புரியவில்லை. இதுபோல அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது, சம ஊதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

திமுகவினர் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? என்று கேட்டதால் தற்போது வேறு வழியே இல்லாமல் பொதுமக்களை சமாளிக்க திமுக அரசு இதுபோன்ற ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது என்று நினைக்கிறேன்." என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran about budget 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->