வாணியம்பாடியில் நடந்த தாக்குதல்., டிடிவி தினகரன் கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் M.J.பாலசுப்பிரமணி மீது சமூக விரோதிகள் சிலர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலுக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள கண்டனச் செய்தியில், 

"கழகத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவரும் வழக்கறிஞருமான திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த திரு.M.J.பாலசுப்பிரமணி அவர்களை சமூக விரோதிகள் சிலர் கண்மூடித்தனமாக தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று டிடிவி தினகரன் கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN Condemn For vaniyampadi attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->