டிடிவி, சசிகலாவுடன் அதிமுக எம்எல்ஏ.,க்கள்? புயலை கிளப்பும் பரபரப்பு பேட்டி!
TTV Dhinakaran Say about ADMK MLA and EPS sasikala
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது.
இதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும், அதிமுக மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்றும், பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் பழனிச்சாமி படு தோல்வி அடைவது உறுதி என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "எடப்பாடி பழனிச்சாமி பண பலத்தை காட்டி மக்களை இனி அவர் ஏமாற்ற முடியாது.
2026 தேர்தல் வரை பழனிச்சாமிக்கு துணை நின்று நிர்வாகிகளும், தொண்டர்களும் வாய்மூடி அமைதியாக இருந்தால், 2026 -ல் அம்மாவின் கட்சிக்கு மூடு விழா நடப்பது உறுதி.
அங்கு உள்ள தொண்டர்கள், அங்கு உள்ள நிர்வாகிகள் விழித்துக் கொண்டு, சரியான தீர்வு காணத வரையில், அவர்கள் முயற்சி செய்யாத வரையில், அம்மாவின் தொண்டர்கள் ஒன்றுபடுவதற்கு வாய்ப்பு இல்லை" என்றார்.
அப்போது செய்தியாளர்கள், அதிமுகவில் தற்போது இருக்கும் எம்எல்ஏக்கள், சசிகலா மற்றும் உங்களுடன் தொடர்பில் உள்ளார்களா என்று ஒரு கேள்வியை எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், யாரும் என்னிடமோ, அவரிடமோ தொடர்பில் இல்லை. அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும், ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
English Summary
TTV Dhinakaran Say about ADMK MLA and EPS sasikala