நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து டிடிவி தினகரன் போட்ட டிவிட்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கம் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி! 

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகளாக நெஞ்சுரத்தோடு களம் கண்ட கழக வேட்பாளர்களுக்கும் அவர்களுக்காகப் பணியாற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும் வெற்றி வாகை சூடிய கண்மணிகளுக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். 

தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்தோடு நம் பணியைத் தொடர்வோம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DHINAKARAN SAY ABOUT ELECTION Victory 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->