அரிதாரம் பூசி நடிக்கும் தி.மு.க.வினரின் உண்மை முகம் - அம்பலப்படுத்தும் டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதியன்று தமிழக அரசின் தொழில் துறையால் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் மற்றும் அரைத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி அரசு தரப்பில் காப்புக்காடுகளையொட்டிய பகுதிகளில் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் குவாரிகள் நடத்துவதற்கு இதுவரை தடை இருந்ததால்தான் காடுகளில் வன உயிரி சூழல் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், தற்போது இந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டால் காப்புக்காடுகளும் கனிம வளத்தால் கொழிப்பவர்களின் வேட்டைக் காடுகளாகிவிடும்.

சுற்றுச்சூழலைக் காக்கவே அவதாரம் எடுத்தவர்களைப் போல அரிதாரம் பூசி நடிக்கும் தி.மு.க.வினரின் உண்மை முகம் இதுதான்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Say About Kappukadu Stone Quarry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->