டிடிவி தினகரன் சிறைக்கு சென்ற அந்த வழக்கு : சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.!
TTV Dhinakran Irattai Iliai Case April 6
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி தொடுக்கப்பட்ட வழக்கில், ஏப்ரல் 8ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி இருந்தது. அப்போது நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் மூலம், தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்குக் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து டெல்லி காவல்துறை பதிவு செய்த வழக்கில், டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டனர். இதில், டிடிவி தினகரன் அறுபத்தி ஒன்பது நாட்கள் திகார் சிறைச்சாலையில் இருந்தபின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதற்கிடையில் இந்த வழக்கில் சட்டவிரோத பரிவர்த்தனை நடந்ததாக கூறி, அமலாக்கத் துறை விசாரணை தொடங்கியுள்ளது. மேலும், வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
English Summary
TTV Dhinakran Irattai Iliai Case April 6