கூட்டணிக்கு வரலாம்! ஆட்சியில் பங்கு உண்டு - விஜய்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதாவது, "இந்த நாட்டையே பாகுபடுத்துகிற, பிளவுவாத அரசியல் செய்கின்றவர்கள் தான் தமிழக வெற்றி கழகத்தின் முதல் முழு முதல் கொள்கை எதிரி. 

அடுத்ததாக 'திராவிட மாடல்' என்று கூறி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கின்ற குடும்ப சுயநலக் கூட்டம் தான் நம்மளுடைய அடுத்த எதிரி, அரசியல் எதிரி, பொலிட்டிக்கல் எனிமி. 

கொள்கை கோட்பாட்டை பொருத்தவரை, திராவிடத்தையோ, தமிழ் தேசியத்தையோ நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பதுதான் நம்முடைய நோக்கம்" என்று தெரிவித்தார்.

இறுதியாக, “நம்முடன் இணைந்து அரசியல் சேவையற்ற வருவோரை (2026 தேர்தலில் கூட்டணிக்கு வருவோரை) உள்ளம் மகிழ்ந்து வரவேற்போம். அப்படி நம்மை நம்பி வருவோருக்கு ஆட்சியில், அதிகாரத்தில் பங்கீடு அளிக்கப்படும்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Alliance 2026 election Vijay announce


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->