தவெக நடத்தியது பிரமாண்ட சினிமா மாநாடு!...அமைச்சர் ரகுபதி விமர்சனம்! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு, பிரமாண்ட சினிமா மாநாடு என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்து பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்றினார்.  விஜய்யின் இந்த மாநாடு தொடர்பாக புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை என்று கூறிய அவர், விஜய் பாஜகவின் சி டீம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு என்று விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk held a grand cinema conference minister raghupathi review


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->