ஃபாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார் விஜய்! கொந்தளிக்கும் திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நடிகர் விஜய், யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறோம், என்ன மாதிரியான அரசியல் செய்யப் போகிறோம் என்பதை தனது கட்சி தொண்டர்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். 

குறிப்பாக மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசையும், தமிழகத்தில் ஆளக்கூடிய திமுக அரசையும் எதிர்த்து தான் நடிகர் விஜயின் அரசியல் இருக்கப் போகிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. 

இந்நிலையில், தவெக மாநாடு மற்றும் விஜய் பேச்சு குறித்து இன்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துவது, "ஃபாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். அவரோ "அவங்க ஃபாசிசம் என்றால் நீங்க பாயசமா" என்று ஃபாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார்.


 

ஃபாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா ? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை முன்னிறுத்துவதாலும்;  "பிளவுவாதத்தை எதிர்ப்போம்" என கூறுவதாலும்; அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Maanadu Vijay VCK thirumavalan 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->