விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என்ன?! அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சியின் கொள்கை பாடல் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

"வெற்றி வாகை" எனத் தொடங்கும் இந்த கொள்கை பாடலில் "துப்பார்க்கு துப்பாய" என்கிற திருக்குறள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. 

இந்த கொள்கை பாடல் காணொளியில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் கொள்கைகளை விஜய்யும் பாடலின் இடையே விளக்கி பேசியுள்ளார். 

மேலும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதே தவெகவின் கோட்பாடு. மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதம், சாதி, பாலினம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே. எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம்.

மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை. தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை தவெக பின்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Manadu TVK Kolkai Song TVK Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->