அப்படி போடு! எடப்பாடி குறித்து விஜய் பேசாதது ஏன்? இதான் காரணமா? அதிமுக என்ன சொல்கிறது? பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் தங்களது அரசியல் எதிரிகளாக திமுக, பாஜக தான் என்று தெளிவாக விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவிக்கையில், "விஜய் கட்சி மாநாட்டால் அதிமுகவுக்கு எல் முனையளவு கூட பாதிப்பு இல்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அதிமுகவின் கொள்கையும் தான்.  த.வெ.க.வின் கொள்கைகள் வரவேற்கத்தக்கது. எம்.ஜி.ஆரை சுட்டிக்காட்டி பேசியிருப்பதும் வரவேற்கத்தக்கது.

திமுக ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் கூடிய கூட்டமாகவே இந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் திமுகவுக்கும், திமுகவின் அரசுக்கும் எதிராக உள்ளதை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அம்பலப்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் குணத்தை பற்றி தெரிந்து கொண்டதால் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை" என்று ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Manadu Vijay ADMK RB Udhayakumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->