உ. பி. தோல்வி எதிரொலி :மக்களிடம் சென்று குறைகளைக் கேளுங்கள் - அமைச்சர்களுக்கு டோஸ் விட்ட யோகி! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடியின் அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், உ. பி. தோல்வி எதிரொலியாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படும் உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இம்முறை பாஜக 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த தேர்தல் தோல்வி குறித்து ஆராய உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, "அமைச்சர்கள் என்றால் வி. ஐ. பி. க்கள் கிடையாது. மக்களிடம் நேரடியாக சென்று அவர்களிடம் குறைகளை கேளுங்கள். மக்களுக்காக தான் அரசு செயல்படுகிறது. மக்களுக்கான செயல்பாடுகளில் வி. ஐ. பி. போல் நடந்து கொள்ளக் கூடாது.

மக்களின் குறைகளைக் கேட்பதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும். பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, ஊடங்களிலும் அமைச்சர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். நமது அரசுக்கு மக்கள் நலன் தான் முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்" என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

U. P. CM Yogi Adhithyanath Adviced His Ministers After Lose


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->