சனாதனம் ஒழிப்பதில் இன்றும் உறுதியுடன் இருக்கிறேன்! - பாஜகவுக்கு உதயநிதி பதிலடி! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு மாநாடு என்பதற்கு பதிலாக சனாதன ஒழிப்பு மாநாடு என பெயர் வைத்ததற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை பாராட்டுகிறேன். சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்கத்தான் வேண்டும். கொரோனா கொசு மலேரியா டெங்கு போன்று சனாதான தர்மத்தையும் ஒழிக்க வேண்டும்.

சனாதான தர்மம் சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரானது" என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் இத்தகைய கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக தலைமை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "சாதியை வைத்துக்கொண்டு கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்தனர். அதனை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தினோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்து. அதையும் மீறி உச்சநீதிமன்ற வரை சென்று உரிமை பெற்று தந்தோம். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அன்று கூறியதை விட, இன்று அதிக உறுதியுடன் இருக்கிறேன். நான் பேசியது யூடியூபில் உள்ளது. என் மீது எத்தனை வழக்குகள் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்ட ஓரே கட்சியே திமுக. மதத்திற்கு எதிராக நான் பேசவில்லை, மதத்தின் உள் இருக்கும் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க தான் பேசினேன்" என பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udayanidhi said that he is determined to abolish Sanadhanam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->